உலக சாம்பியன்ஷிப் யோகாவில் இந்தியா முதலிடம் !

உலக சாம்பியன்ஷிப் யோகா போட்டி
உலக சாம்பியன்ஷிப் யோகா போட்டி
Published on

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற முதலாவது உலக சாம்பியன்ஷிப் யோகா போட்டியில் இந்தியா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.

கடந்த 4 முதல் 8ஆம் தேதி வரை நடைபெற்ற இப்போட்டியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். இந்தப் போட்டியில் 102 தங்கம் உட்பட 114 பதக்கங்களைப் பெற்று இந்தியா முதலிடம் பெற்றுள்ளது.

இப்போட்டியில் உலகம் முழுதும் இருந்து ஏராளமானோர் பங்குபெற்றனர். 79 நாடுகளைச் சேர்ந்த 522 வீரர்கள் பங்கேற்றனர். பெரும்பாலான போட்டிகளில் இந்திய வீரர்களே ஆதிக்கம் செலுத்தினர்.

பதக்கப் பட்டியலில் 3 தங்கம், 3 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்ததுள்ளது ஜப்பான்.

அதைத் தொடர்ந்து அர்ஜெண்டினா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

யோகாசனத்தை உலக அளவில் பிரபலப்படுத்தும் ஒரு முயற்சியாக இந்தப் போட்டி கருதப்படுகிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com