மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன் இலங்கைக்கு 3 நாள் பயணம்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 3 நாள் சுற்றுப்பயணமாக இன்று இலங்கை செல்கிறார்.

இந்திய வம்சாவளி தமிழர்கள் இலங்கையில் குடியேறிய 200ஆம் ஆண்டையொட்டி, கொழும்பில் ‘நாம் 200’ என்ற தலைப்பில் இன்று நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்கிறார். அதனைத் தொடர்ந்து, இந்தியா- இலங்கை வர்த்தக உச்சி மாநாடு நடைபெறுகிறது. அதிலும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்க உள்ளார்.

யாழ்ப்பாணம், திருகோணமலையில் எஸ்.பி.ஐ. வங்கி கிளையைத் திறந்து வைக்கும் அவர், இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் கிடங்குகளையும் பார்வையிடுகிறார்.

மேலும், யாழ்ப்பாண பொது நூலகம், யாழ்ப்பாண கலாச்சார மையம் ஆகியவற்றையும் பார்வையிடுகிறார். இந்த பயணத்தின் போது வழிபாட்டுத் தலங்களில் சூரிய மின்சக்தி உற்பத்திக்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட உள்ளது.

இந்தப் பயணத்தில் பெளத்த புனித தலங்களையும், தமிழர்களின் வழிபாட்டு தலங்கலையும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிடுகிறார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com