விஜய் அறக்கட்டளை பெயரில் ம.பி.யில் மோசடி!

CM Vijay
முதலமைச்சர் விஜய்
Published on

தமிழக முதலமைச்சர் விஜய்யின் பெயரிலான அறக்கட்டளை எனக் கூறி மத்தியப்பிரதேசத்தில் பணமோசடி செய்யப்பட்டிருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

முதலமைச்சராக விஜய் பதவியேற்றதற்குப் பிறகு, வடமாநிலங்களில் பல்வேறு மொழிகளில் விஜய்யைப் பற்றிய காணொலிகள் சமூக ஊடகங்களில் ரீல்களாகப் பரப்பப்பட்டு வருகின்றன.

இதன் பின்னணி, அரசியல் தொடர்பாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், விஜய் அறக்கட்டளை பெயரில் மத்தியப்பிரதேச மாநிலத்தில் பணமோசடியில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.

பத்து இலட்சம் ரூபாய்வரை நிதியுதவி வாங்கித் தருவதாகக் கூறி, ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய்வரை கட்டணம் என வசூலித்து ஏமாற்றியுள்ளனர்.

விஜய் அறக்கட்டளை என்ற பெயரில் இவர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

இப்படியான நம்பிக்கையைச் சொல்லி யார் பேசினாலும் ஏமாற வேண்டாம் என இந்தூர் மாவட்ட காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com