பிரபல சமையல் எண்ணெய் நிறுவனம் மீது நடவடிக்கை!

FSSAI
இந்திய உணவுப் பாதுகாப்பு-தர நிர்ணய ஆணையம்
Published on

மிகப் பிரபலமான சமையல் எண்ணெயான ஃபார்ச்சூன் சூரியகாந்தி எண்ணெய் தயாரிப்பில், உணவு பாதுகாப்பு ஆணையம் குறிப்பிட்ட அளவை விட குறைவான அளவில் விட்டமின் டி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இந்திய உணவுப் பாதுகாப்பு - தர நிர்ணய ஆணையம் குறிப்பிட்ட வரையறைகளை பின்பற்றாத இரண்டு நிறுவனங்களின் மீது, இந்திய உணவுப் பாதுகாப்பு ஆணையம் சமீபத்தில் நடவடிக்கை எடுத்துள்ளது. அதில் ஒன்றுதான் இந்த ஃபார்ச்சூன் சூரியகாந்தி எண்ணெய்.

கடைகளில் விற்பனை செய்யப்படும், இந்த எண்ணெயை ஆய்வு செய்தபோது, அதன் தரம் குறைவாக உள்ளது தெரியவந்துள்ளது. இதனால், இதை தயாரிக்கும், மங்களூரில் உள்ள ஏ.டபிள்யூ.எல் அக்ரி பிசினஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதைதொடர்ந்து, பை புட்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் மான்க் ஃபூருட் ஸ்வீட்னர் தயாரிக்கப்படும் இடத்தை ஆய்வு செய்தபோது, அனுமதி பெறாமல் அளவிற்கு அதிகமான பொருட்களை கிடங்கில் சேமித்து வைத்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

மேலும், இந்த ஸ்வீட்னரை தயாரிக்கப் பயன்படுத்தும் மான்க் ஃபூருட்டின் கொள்முதல் குறித்த விவரங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்றும் இந்திய உணவுப் பாதுகாப்பு ஆணையம் குற்றம்சாட்டியுள்ளது.

இந்தப் பொருளை விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உணவுப் பொருட்களை வாங்கும் நுகர்வோருக்கு, தரமான பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யவே, பல்வேறு உணவுத் தயாரிப்பு நிறுவனங்களை கண்காணித்து இதுபோன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருவதாக இந்திய உணவுப் பாதுகாப்பு - தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com