மு.க.ஸ்டாலின் - ஜோ பைடன் சந்திப்பு
மு.க.ஸ்டாலின் - ஜோ பைடன் சந்திப்பு

ஜி20: அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்துப் பேசியுள்ளார்.

டெல்லியில் நேற்றும், இன்றும் 18வது ஜி20 உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக உலக தலைவர்கள் பலர் டெல்லியில் குவிந்துள்ளனர். ஜி20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர்.

நேற்றிரவு, ஜி20 தலைவர்களுக்கும் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநில முதலமைச்சர்களுக்கும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் குடியரசுத் தலைவர் விருந்தளித்தார். இந்த விருந்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கலந்து கொண்டார்.

அப்போது முதல்வர் ஸ்டாலினை, பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிலையில், ஜோ பைடனுடன் கைகுலுக்கிக்கொண்ட புகைப்படத்தை முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டரில் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com