'திருமணத் தயார்நிலை' - இப்படியொரு படிப்பு அறிமுகம்!

Marriage course
திருமணத்திற்கான படிப்பு
Published on: 

ஒரு படிப்பைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்னர், அத்தனை ஆலோசனைகளைப் பெறும் நாம் திருமணத்திற்கு முன் ஏன் ஒரு முறையான ஆலோசனையைப் பெறக்கூடாது என்று கோவாவைச் சேர்ந்த ஒரு கல்லூரி சிந்தித்துள்ளது.

கோவா நீதிமன்றங்களில் 3,000-த்திற்கும் மேற்பட்ட விவாகரத்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், கோவாவின் முதலமைச்சர் பிரமோத் சாவந்த் விவாகரத்துகளைக் குறைக்க, திருமணத்திற்குமுன் ஆலோசனை வழங்கத் திட்டமிட்டுள்ளதாக அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கூறினார்.

அதைத் தொடர்ந்து, கோவா மனையியல் கல்லூரியின் மானுட மேம்பாடு - குடும்பவியல் துறை, திருமணத்திற்கான தயார்நிலை என்ற தலைப்பில் 15 நாள்களுக்கான சான்றிதழ்ப் படிப்பை அறிவித்துள்ளது.

இந்தப் படிப்பில் திருமண உறவில் நாம் எதிர்கொள்ளும் சிக்கல்கள், திருமண உறவைப் பலப்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும் ஆகியவை குறித்த வகுப்புகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

'திருமணத் தயார்நிலை: ஆரோக்கியமான - நீடித்த உறவுகளுக்குத் தயாராதல்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சான்றிதழ் படிப்பு வரும் டிசம்பர் 2 முதல் 17ஆம் தேதி வரை 15 நாள்களுக்கு நடைபெற உள்ளதாக கல்லூரியின் முதல்வர் மகேஷ் பாய் தெரிவித்துள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram