வினோத் தாவ்டே முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்த கெளரவ் வல்லப்
வினோத் தாவ்டே முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்த கெளரவ் வல்லப்

காலையில் காங்கிரஸ், பிற்பகலில் பா.ஜ.க... ‘கெளரவ்’ பல்டி!

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்த கெளரவ் வல்லப் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அரை நாள் கூட ஆகாத நிலையில், அவர் இன்று மாலை பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.

டெல்லி பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே முன்னிலையில் கெளரவ் வல்லப் தன்னை பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டார்.

பா.ஜ.க.வில் இணைந்த பிறகு கெளரவ் வல்லப் கூறியதாவது, “காலையில் சமூக ஊடகங்களில் ஒரு கடித்ததை வெளியிட்டேன். அதில் என் வலிகளை எழுதினேன். ராமருக்கு அயோத்தியில் கட்டவேண்டும் என்ற எண்ணம் முன்பிருந்தே இருந்தது. அயோத்தி ராமர் கோவில் விழாவில் பங்கேற்க காங்கிரஸ் மறுப்பு தெரிவித்ததை என்னால் ஏற்கமுடியவில்லை. இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்கள் சனாதனம் குறித்து கேள்வி எழுப்பியதற்கு காங்கிரஸ் ஏன் பதிலளிக்கவில்லை.?

இன்று நான் பா.ஜ.க.வில் இணைந்துள்ளேன். இந்தியாவை முன்னேற்றுவதற்கு என்னுடைய திறமையையும் அறிவையும் பயன்படுத்துவேன்” என்று கெளரவ் வல்லப் கூறினார்.

முன்னதாக, சனாதனத்துக்கு எதிராக பேச முடியாது என்று கூறி காங்கிரஸ் கட்சியிலிருந்து தன்னை விலக்கிக் கொண்ட கெளரவ் வல்லப் சில மணி நேரத்திலேயே பா.ஜ.க.வில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com