கேரளத்தில் கனமழைக்கு 6 பேர் பலி!

Heavy rain at Kerala
கனமழை
Published on

கேரளத்தில் கனமழைக்கு 6 பேர் உயிரிழந்த நிலையில், இன்று கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரளத்தில் தொடர் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவினால் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தங்கியிருந்த வீடு இடிந்தது. இதில் 2 பேர் உயிரிழந்தனர்.

சுற்றுலாவுக்காக கேரளம் சென்றிருந்த சென்னையைச் சேர்ந்த பெண் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். நேற்று மதியம்வரை கனமழையினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆறாக இருந்தது.

இந்நிலையில், கேரளத்தின் ஆலப்புழா, எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், கோட்டயம், பத்தினம்திட்டா ஆகிய மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் சார்பில் இன்று மஞ்சள் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com