கேதார்நாத் ஹெலிகாப்டர்
கேதார்நாத் ஹெலிகாப்டர்

6 பக்தர்கள்… கேதார்நாத்தில் பதறவைத்த ஹெலிகாப்டர்!

கேதார்நாத்தில் பக்தர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு வருடந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இந்த இடங்களுக்கு மிகவும் ஆபத்தான வழிகளிலும் மோசமான வானிலையிலும் பயணம் செய்ய வேண்டி உள்ளதால் சார்தாம் புனித யாத்திரை மிகுந்த கட்டுப்பாடுகளுடன் கடந்த மே 10 அன்று தொடங்கியது.

இந்நிலையில், இன்று காலை பக்தர்களை கேதார்நாத்துக்கு ஏற்றி வந்த ஹெலிகாப்டர் ஒன்று அந்தரத்தில் நிலைதடுமாறி சுழன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிர்சி ஹெலிபேடில் இருந்து கேதார்நாத் தாமுக்கு விமானியுடன் 6 பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த ஹெலிகாப்டர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக காலை 7.05 மணி அளவில் கேதார்நாத் தாம் ஹெலிபேடுக்கு அருகில் கட்டுப்பாட்டை இழந்ததால் சுமார் 100 மீட்டர் முன்னதாக அவசரமாக தரையிறக்கப்பட்டது.

ஹெலிகாப்டரில் இருந்த 6 பயணிகளும் விமானியும் பத்திரமாக இருந்தனர்.

ஹெலிகாப்டர் தரையிறங்க முடியாமல் அந்தரத்தில் சுழலும் வீடியோ வெளியாகியுள்ளது. ஹெலிபேடில் நின்றுகொண்டிருந்த நபர்கள் மீது மோதுவதுபோல் ஹெலிகாப்டர் மிகவும் அருகில் வந்ததால் அவர்கள் அங்கிருந்து பயத்தில் ஓடுவது வீடியோவில் பதிவாகியுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com