மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

கார் விபத்து - மம்தா பானர்ஜி விளக்கம்!

கார் விபத்து குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விளக்கம் அளித்துள்ளார்.

கொல்கத்தாவில் இருந்து 102 கி.மீ. தொலைவில் உள்ள புர்பா பர்தமான் என்ற இடத்தில் நிர்வாக மறுஆய்வுக் கூட்டத்திற்கு தலைமை தாங்குவதற்காக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று சென்றுள்ளார். பர்தவானிலிருந்து கொல்கத்தாவிற்கு சாலை மார்க்கமாக சென்று கொண்டிருந்த போது கார் விபத்திற்கு உள்ளானது.

பாதுகாப்பு வாகனம் முன்பு திடீரென மற்றொரு கார் வந்ததால், அந்த கார் மீது மோதாமல் இருப்பதற்காக ஓட்டுநர் உடனடியாக பிரேக் போட்டுள்ளார். இதனால் காரின் கண்ணாடியில் மம்தா பானர்ஜியின் தலை மோதியது. இதில் அவருக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

விபத்துக்குப் பின்னர் மம்தா பானர்ஜி கொல்கத்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மம்தா, “ஒரு வாகனம் ஒன்று இரு நூறு கிலோமீட்டர் வேகத்தில் பாதுகாப்பு வாகனம் முன்பு வந்தது. ஓட்டுநர் உடனடியாக பிரேக் அடித்தால், தலை சீட்டில் மோதியது. இதனால் நெற்றியில் காயம் ஏற்பட்டது. காய்ச்சலாக உள்ளது.” என்று கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com