மனித விரல் இருந்த ஐஸ்கிரீம்
மனித விரல் இருந்த ஐஸ்கிரீம்

ஐஸ்கிரீமில் மனித விரல்… நிறுவனத்தின் மீது வழக்குப் பதிவு!

மும்பையில் ஆர்டர் செய்த ஐஸ்கிரீமில் மனித விரல் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் உள்ள மலாடில் வசிக்கும் ஓர்லெம் பிரெண்டன் செர்ராவ் என்ற மருத்துவர், மதிய உணவு இடைவேளையில் யம்மோ நிறுவனத்தின் பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கீரீமை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். அப்போது, ஐஸ்கிரீமில் ஏதோ தட்டுப்படுவதுபோல் உணர்ந்துள்ளார். அதில் என்ன இருக்கிறது என்ற கூர்ந்து பார்த்தவர், அதற்குள் ஒரு மனித விரல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

அதிர்ச்சியடைந்த அவர், யம்மோ நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகார் தெரிவித்துள்ளார். அதற்கு எந்த பதிலும் வராததைத் தொடர்ந்து, ஐஸ்கிரீமை கொண்டு சென்று மலாட் காவல் நிலையத்தில் புகாரளித்தார். உணவுக் கலப்படம், மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தியதற்காக யம்மோ நிறுவனத்தின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

போலீசார் ஐஸ்கிரீமில் இருந்த மனித விரலை தடயவியல் ஆய்வுக்கும் அனுப்பியுள்ளனர். இது தொடர்பாக விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.

ஐஸ்கீரிமில் மனித விரல் இருந்தது தொடர்பான படங்கள் சமூக ஊடகத்தில் வைரலாகியுள்ளன.

logo
Andhimazhai
www.andhimazhai.com