கால்நடை மருத்துவத் தேர்வு முறைகேடு - மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது!

IAS Officer arrested
கைது செய்யப்பட்ட மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி
Published on

கர்நாடக பொதுப்பணித்துறை நடத்தும் கால்நடை மருத்துவத் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஞானேந்திர குமார் கங்குவாரை, சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர்.

கால்நடை மருத்துவர்களுக்கான 400 மருத்துவக் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த 2023- 2024 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்வின்போது, கர்நாடக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு கண்காணிப்பாளராக இருந்தவர் ஞானேந்திர குமார் கங்குவார்.

அப்போது நடைபெற்ற தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு வினாத்தாள் கசிந்ததாகவும், தேர்வு எழுதிய ஓ.எம்.ஆர். தாள்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.

மேலும், தேர்ச்சிபெற உதவுவதற்காக ரூ.70 லட்சம் முதல் ரூ. 80 லட்சம்வரை இடைத்தரகர்கள் மூலமாக பெறப்பட்டதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்தப் பணமோசடி காரணமாக கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி ஞானேந்திர குமாரின் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. இதில் தேர்வு முறைகேடுகளில் அவர் ஈடுபட்டதற்கான பல்வேறு ஆதாரங்கள் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து, கர்நாடக சி.ஐ.டி. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் கேள்விக்கு முரணாக பதிலளித்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com