மஸ்ஜித் முகம்மது பின் அப்துல்லா
மஸ்ஜித் முகம்மது பின் அப்துல்லா

புதிய பாபர் மசூதி- அடிக்கல் நாட்டும் மெக்கா இமாம்!

பாபர் மசூதிக்குப் பதிலாக அயோத்தி தன்னிப்பூரில் கட்டப்படும் புதிய மசூதிக்கு அடிக்கல் நாட்டுவதற்கு மெக்காவைச் சேர்ந்த இமாம் – ஏ – ஹராம் வருகிறார்.

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி அயோத்தியிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தன்னிப்பூரில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் மசூதி கட்டப்பட உள்ளது.

இந்தியாவிலேயே மிகப்பெரிய மசூதியாக மஸ்ஜித் முகம்மது பின் அப்துல்லா அமையும் என்று கூறப்படுகிறது. இஸ்லாமிய மார்க்கத்தினை பிரதிபலிக்கும் வகையில் 5 தூண்கள் அமைக்கப்படவுள்ளன.

மேலும், மசூதியுடன் புற்றுநோய் மருத்துவமனை, பள்ளி, கல்லூரி, அருங்காட்சியகம், நூலகம், உணவகம் ஆகியவை அமைக்கப்படவுள்ளன

அடிக்கல் நாட்டும் விழாவின்போது, மசூதியின் வடிவமைப்பும் வெளியிடப்படவுள்ளது. எல்லாவற்றையும்விட மிகப் பெரிய கடல் உயிரினக் காட்சியகமும் இங்கு அமையவுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com