ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்
ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்

ராஜஸ்தான்: குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 10,000 - காங்கிரஸ் வாக்குறுதி!

ராஜஸ்தானில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 10,000 வழங்கப்படும் என்று முதலமைச்சர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் 200 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வருகிற நவம்பர் 25 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, முதல்வர் அசோக் கெலாட் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது முதல்வர் அசோக் கெலாட் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதன்படி, ராஜஸ்தானில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 10,000 வழங்கப்படும், இது இரண்டு அல்லது மூன்று தவணைகளாக பெண்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்று அறிவித்தார்.

மேலும், 1.05 கோடி குடும்பங்களுக்கு ரூ. 500-க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com