ராமர் கோயில்
ராமர் கோயில்

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா: மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை!

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி, வருகிற 22ஆம் தேதி அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் இன்று செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, "அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் மற்றும் சிலை பிரதிஷ்டை விழா இந்தியா முழுவதும் 22 ஜனவரி 2024 அன்று கொண்டாடப்படும். இந்த கொண்டாட்டங்களில் ஊழியர்கள் பங்கேற்க, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள், மத்திய நிறுவனங்கள் மற்றும் மத்திய தொழில் நிறுவனங்கள் அனைத்தும் ஜனவரி 22, 2024 அன்று 2.30 மணி மூடப்படும். இது தொடர்பான உத்தரவு அனைத்து மத்திய அரசின் அமைச்சகங்கள் / துறைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது” என்றார்.

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 22-ஆம் தேதி மதியம் 12.20 மணியளவில் தொடங்கி 1 மணி வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com