
ஒன்றிய அரசின் வரவு- செலவு அறிக்கையில் வருமான வரி செலுத்துவோருக்கு புதிய அறிவிப்புகள் ஏதும் இல்லை. அதேசமயம் ஏற்கெனவே இடையில் அறிவிக்கப்பட்ட புதிய வருமான வரிச் சட்டம் வரும் ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வரும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மற்ற சில அறிவுப்புகள் :
வருமான வரி ரிட்டன் தாக்கல்செய்வது டிசம்பரிலிருந்து மார்ச்வரை கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் வாகன இழப்பீடு பெறுவோருக்கு வரியிலிருந்து முற்றிலுமாக விலக்கு அளிக்கப்படும்.
வெளிநாடுகளில் கல்வி, மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பப்படும் பணத்துக்கான வரி 5 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாகக் குறைக்கப்படும்.
வெளிநாட்டில் வசிக்கும் இந்தியரின் அசையாச் சொத்து விற்பனை மீதான வரி குறைக்கப்படும்.
பங்குப் பரிவர்த்தனை வரியை பியூச்சர் வகைக்கு 0.02% இலிருந்து 0.05% ஆகவும்; ஆப்சன்ஸ் வகைக்கு 0.01% இலிருந்து 0.15% ஆகவும் உயர்த்த நிதியமைச்சர் பரிந்துரைத்துள்ளார்.
வெளிநாட்டுச் சுற்றுலாவுக்கு இப்போதைய முறையில் 5%, 20% என மூலத்திலேயே பிடிக்கப்படுவதை மாற்றி, ஒரேமுறையாக 2 சதவீதமாக ஆக்கப்படும்.