வருமான வரி துறை
வருமான வரி துறை

காங்கிரசை அடுத்து கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமான வரி பாக்கி என நோட்டீஸ்!

காங்கிரஸ் கட்சிக்கு அடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வருமான வரித் துறை சார்பில் வரி நிலுவையில் இருப்பதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

முன்னதாக, காங்கிரஸ் கட்சிக்கு 1,823 கோடி ரூபாய் அபராதம் விதித்து வருமான வரித் துறை அறிவிக்கையை அனுப்பியிருந்தது. அக்கட்சியின் வங்கிக் கணக்குகளும் சிறிது நேரத்துக்கு முடக்கிவைக்கப்பட்டிருந்தன. 

முறையீட்டுக்குப் பின்னரே, காங்கிரஸ் கட்சி, இளைஞர் காங்கிரஸ் ஆகியவற்றின் கணக்குகளை மீண்டும் கையாள முடிந்தது. 

அதைத் தொடர்ந்து, இப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் 11 கோடி ரூபாய் வருமான வரி பாக்கி இருக்கிறது என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் அரசியல் அரங்கில் பெரும் அதிர்ச்சி அலைகள் உண்டாகியுள்ளன. 

அடுத்தடுத்து எதிர்க்கட்சிகளின் செலவுப் பணத்தை முடக்கிவைப்பதன் மூலம் அவற்றின் செயல்பாட்டை முடக்க சதி நடப்பதாக மூத்த தலைவர் ப. சிதம்பரம் உட்பட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

இந்த விவகாரம் குறித்து சட்டரீதியாக அணுகவுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள் கூறியுள்ளனர்.  

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com