ஜெய்ராம் ரமேஷ்
ஜெய்ராம் ரமேஷ்

இந்தியா கூட்டணி எத்தனை இடங்களை வெல்லும்?– ஜெய்ராம் ரமேஷ் சொல்லும் புதுக் கணக்கு!

இந்தியா கூட்டணி 350 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கான 6ஆம் கட்ட வாக்குப் பதிவு நேற்று நிறைவடைந்த நிலையில், முதல் கட்ட வாக்குப்பதிவிலிருந்து காங்கிரஸ் கட்சியின் கை ஓங்கியிருப்பதாகவும், ஆளும் பா.ஜ.க.வின் செல்வாக்கு முடிந்துவிட்டதாகவும் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

தென்னிந்திய மாநிலங்களில் பா.ஜ.க. துடைத்தெறியப்படுவதாகவும் மற்ற மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சியை இழந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ”பீகார், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களின் வாக்குப் பதிவு முடிந்துள்ள நிலையில், இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையேயான இணக்கம் அதிகரித்திருப்பதை பார்க்க முடிகிறது. மொத்தம் உள்ள மக்களவைத் தொகுதியில், ஏற்கெனவே பாதி இடங்களை (272) இந்தியா கூட்டணி கைப்பற்றி விட்டது. இந்த கூட்டணி 350 இடங்களுக்கு மேல் கைப்பற்றும்.

விவசாயிகள் பிரச்னை காரணமாக அரியானா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் பா.ஜ.க.வால் சரியாக தேர்தல் பிரச்சாரம் செய்யவில்லை.” என்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com