சீன பீரங்கிகளை விட அதிக திறன் கொண்ட ’ஜோராவார்’ என்ற பீரங்கியை இந்தியா வடிவமைத்துள்ளது. இது பலகட்ட சோதனை ஓட்டத்துக்குப் பிறகு இந்திய இராணுவத்துக்கு வழங்கப்பட உள்ளது.
கிழக்கு லடாக் பகுதியில் சீனா அவ்வப்போது அத்துமீறுவதால், இந்திய ராணுவ பலத்தை அதிகரிக்கும் நோக்கில், நீரிலும் மலையிலும் செல்லக்கூடிய இலகுரக பீரங்கியை டிஆர்டிஓ என்ற பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் வடிவமைத்துள்ளது.
ஏற்கெனவே நடைமுறையில் உள்ள டி72 மற்றும் டி-90 பீரங்கிகளை விட இலகுவான இந்த பீரங்கி, ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளை எளிதில் கடந்து செல்லக் கூடியது.
குஜராத்தின் ஹசிரா பகுதியில் இதன் சோதனை ஓட்டத்தைப் பார்வையிட்ட டிஆர்டிஓ தலைவர் காமத், சென்னையில் உள்ள பிரத்தியேக சாலையில் சோதனை ஓட்டம் நடைபெற்ற பிறகு வரும் 2027-ஆம் ஆண்டுக்குள் இந்த 25 டன் இலகுரக பீரங்கி பயன்பாட்டுக்கு வரும் என தெரிவித்துள்ளார்.
தற்போது லடாக் எல்லையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள சீனாவின்15 ரக பீரங்கியை விட 'ஜோராவார்' அதிக திறன் கொண்டது.