83.1%... கடன் சுமை வரிசையில் இந்தியா 26ஆவது இடம்!

India ranks 26th in the debt countries list
அதிக கடன்சுமை உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா 26ஆவது இடம்ஏஐ
Published on: 

உலகின் அதிகமான கடன் சுமை உள்ள நாடுகளில், இந்தியா 26ஆவது இடத்தில் உள்ளது.

ஒவ்வொரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிட்டு, அதிக கடன் சுமை உள்ள நாடுகளின் பட்டியலை சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ளது.

உலக நாடுகளின் கடன் சுமை அதிகரிப்பதற்கான காரணங்கள்:

1) அரசாங்கத்திற்குச் செல்லும் வரியைப் போன்ற அரசு வருமானத்தைவிட அந்த நாட்டின் நிர்வாகம், உட்கட்டமைப்பு, மானியங்கள் ஆகியவற்றுக்கு செலவுகள் அதிகமாக இருக்கும்போது, அரசாங்கம் கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறது.

2) உள்நாட்டுப் போர், மோதல்கள் காரணமாக நாட்டில் உற்பத்தி வீழ்ச்சியடைவதுடன், பாதுகாப்புச் செலவுகளும் பன்மடங்காக உயர்கின்றன.

3) சர்வதேசச் சந்தைகளில் வட்டிவீதம் உயரும்போது, ஏற்கெனவே வாங்கிய கடன்களுக்கான வட்டியைக் கட்டவே உலக நாடுகள் சிரமத்தை எதிர்கொள்கின்றன.

உலகளாவிய வட்டிவீதங்களில் மாற்றம், அரசியல் பதற்றங்களால் நடப்பு ஆண்டின் அக்டோபர் மாத அறிக்கையின்படி, வளர்ந்துவரும் ஏராளமான நாடுகள் கடன் சுமையை எதிர்கொள்வதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அதிக கடன்சுமை உள்ள நாடுகள் பட்டியலில் 334.4% கடனுடன் சூடான் நாடு முதலிடத்தில் உள்ளது.

அதைத் தொடர்ந்து, 204.4% ஜப்பான் இரண்டாவது இடத்திலும், அடுத்தடுத்த இடங்களில் சிங்கப்பூர் (171.9%), பஹ்ரைன் (152.4%), இத்தாலி (138.4%), கிரீஸ் (136.9%), செனகல் ( 132.3%), மாலத்தீவு (129.4%), அமெரிக்கா (125.8%), உக்ரைன் (122.6%) ஆகிய நாடுகள் அதிக கடன் சுமை உள்ள நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன.

இதில் சிங்கப்பூரின் கடன் அதிகமாக இருந்தாலும், அந்நாடு பூஜ்ஜிய நிகரக்கடன் கொண்ட வலுவான பொருளாதாரம் உடைய நாடாக உள்ளதாகவும், போர்ச்செலவினால் உக்ரைனின் கடன் சுமை அதிகரித்துள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

மேலும், 83.1% கடன் சுமையுடன் 26ஆவது இடத்தில் இருக்கும் இந்தியாவின் கடன் சுமை கட்டுக்குள் இருப்பதாகவும் சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com