சேவைத் துறையில் இந்தியா தொடர்ந்து வளர்ச்சி!

India reached it's peak growth in service sector
சேவைத் துறையில் புதிய உச்சத்தை எட்டிய இந்தியா
Published on: 

இந்தியாவில் சேவைத் துறையின் வளர்ச்சி, கடந்த அக்டோபர் மாதத்தில் புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக அறிக்கையில் வெளியாகி உள்ளது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சேவைத் துறை மட்டும் 56.4% பங்களிக்கிறது. மேலும், 9.1% என்ற வேகமான வளர்ச்சி விகிதத்தையும் கொண்டு சேவைத் துறை இயங்கி வருகிறது.

இந்நிலையில், கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவிற்கு அக்டோபரில் சேவைத் துறை அதீத வளர்ச்சி அடைந்துள்ளது. இதற்கான முக்கிய காரணம் வணிகச் சூழலில் ஏற்பட்டுளள முன்னேற்றம், புதிய ஆர்டர்களின் வருகை ஆகிய இரண்டுமே ஆகும் என்று எச்.எஸ்.பி.சி.யின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாட்டின் அல்லது குறிப்பிட்ட பகுதியின் உற்பத்தி, சேவைத் துறைகளின் பொருளாதார நிலையை அளவிடும் முக்கிய குறியீடாக பி.எம்.ஐ. எனப்படும் கொள்முதல் மேலாளர்களின் குறியீடு ஆகும். இந்தக் குறியீடானது, ஒவ்வொரு மாதமும் தனியார் நிறுவனங்களின் கொள்முதல் மேலாளர்களிடம் நடத்தப்படும் கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில் இந்த கணக்கிடப்படுகிறது.

இந்த பி.எம்.ஐ. குறியீட்டின் அளவுகோல்கள் 0 முதல் 100 வரை ஆகும். இதில் பி.எம்.ஐ. மதிப்பு 50-க்கு மேல் இருந்தால், பொருளாதாரத்தில் வளர்ச்சி அல்லது விரிவாக்கம் அடைவதாகவும், பி.எம்.ஐ. மதிப்பு 50-க்கு கீழ் இருந்தால், பொருளாதாரத்தில் சுருக்கம் அல்லது வீழ்ச்சி அடைவதாகவும் எடுத்துக்கொள்ளப்படும்.

இந்நிலையில், இந்தியாவில் சேவைத் துறையின் பி.எம்.ஐ. மதிப்பு, செப்டம்பர் மாதத்தில் 55.2ஆக இருந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதத்தில் 55.8ஆக உயர்ந்துள்ளது.

பொருளாதாரத்தில் இந்த சேவைத் துறை வளர்ச்சி அடைந்து இருந்தாலும், கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பு குறைந்துள்ளதாகவும், கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சர்வதேச விற்பனை குறைந்துள்ளதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram