இந்தியா - கனடா
இந்தியா - கனடா

தூதரக அதிகாரி வெளியேற்றம்: கனடாவுக்கு பதிலடி கொடுத்த இந்தியா!

இந்திய தூதரக அதிகாரியை கனடா வெளியேற்றியதற்குப் பதிலடியாக கனடா தூதரக அதிகாரியை இந்தியா வெளியேற்றியுள்ளது.

கனடாவில் காலிஸ்தான் டைகர் படைப்பிரிவின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜார் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலையில் கனடாவில் உள்ள இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா மற்றும் டொரான்டோவில் உள்ள துணைத் தூதர் அபூர்வா வஸ்த்தவா ஆகியோர் முக்கிய பங்காற்றியுள்ளனர் என கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டினர்.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, "இந்திய அரசாங்க முகவர்களுக்கும் காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் கொலைக்கும் தொடர்பு இருப்பதற்கான நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகள் உள்ளன. " என்று கூறினார். அதனைத் தொடர்ந்து, இந்தியாவின் மூத்த தூதரக அதிகாரிகையை கனடா வெளியேற்றியது. அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவுக்கான கனடா தூதரை வெளியேறும்படி இந்தியா கூறியுள்ளது. அவர் அடுத்த ஐந்து நாள்களுக்குள் வெளியேறும்படி உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com