ரூ.6,614 கோடி தென்னை நார்ப் பொருட்கள் ஏற்றுமதி - இந்தியா முதலிடம்!

COIR PRODUCTS
தென்னை நார் பொருட்கள்
Published on: 

தென்னை நார்ப் பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியா உலக அளவில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

இந்தியாவில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர தென்னை நார், அதனைச் சார்ந்த பொருட்கள் தயாரிக்கும் உற்பத்தித் தொழிற்சாலைகள் உள்ளன.

இந்தத் தொழிற்சாலைகள் மூலமாக தென்னை நாரைக் கொண்டு கால்மிதி, கயிறு உட்பட்ட பல்வேறு மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்தப் பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டும் வருகின்றன.

பிளாஸ்டிக்கு மாறாக பொருட்கள் தயாரிக்கத் தென்னை நார் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் கடந்த ஆண்டு மட்டும், தென்னை நார்ப் பொருட்கள் ரூ.6,614 கோடியையும், உள்நாட்டு வணிகம் ரூ. 16 ஆயிரம் கோடியையும் எட்டியுள்ளன. இதன் மூலமாக உலகளவில் தென்னை நார்ப் பொருட்கள் உற்பத்தியில் இந்தியா தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது.

வரும் 2035-ஆம் ஆண்டிற்குள், இந்தியாவில் தென்னை நார்ப் பொருள் உற்பத்தி, ஏற்றுமதி ரூ. 45 ஆயிரம் கோடியாகவும், உள்நாட்டு வணிகம் ரூ. 55 ஆயிரம் கோடியாகவும் உயர வாய்ப்புள்ளதாக தேசிய தென்னை நார் கூட்டமைப்பின் தலைவர் கவுதமன் தெரிவித்துள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram