உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் பங்கேற்கும் 20 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டி பெல்ஜியம், நெதர்லாந்தில் வரும் ஆகஸ்ட் 14 முதல் 30ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் 16 அணிகள் பங்கேற்கின்றன.
முதலில் குழு சுற்று போட்டியில் நான்கு பிரிவுகளாக 16 அணிகள் விளையாடுகின்றன. பின்னர், குழு சுற்றில் முதல் இரண்டு இடம் பிடித்த அணிகள் இரண்டாவது சுற்றில் விளையாடும்.
அதில் முதல் இரண்டு இடங்கள் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
அதைத் தொடர்ந்து கிளாசிபிகேஷன் சுற்று, நாக்-அவுட் சுற்றுகள் நடைபெறும்.
ஆகஸ்ட் 30ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெறும்.
இந்திய அணியின் கேப்டனாக ஹர்மன்ப்ரீத் சிங் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியின் விவரம்:
கேப்டன் : ஹர்மன்ப்ரீத் சிங்
கோல்கீப்பர்கள்: மோஹித், சுராஜ்
தடுப்பாட்ட வீரர்கள்: ஜர்மன்பிரீத் சிங், ஹர்மன்பிரீத் சிங், அமித் ரோஹிதாஸ், ஜுக்ராஜ் சிங், சஞ்சய், சுமித், யஷ்தீப்.
மிடில் பீல்டர்கள்: ரஜிந்தர் சிங், ஆதித்ய அர்ஜுன், ஹர்திக் சிங், மன்பிரீத் சிங், நீலகண்ட சர்மா, விவேக் சாகர் பிரசாத்.
முன்கள வீரர்கள்: தில்பிரீத் சிங், ஷிலானந்த், ஷுக்ஜீத் சிங், மந்தீப் சிங், அபிஷேக்.