ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் கிரிக்கெட் அணி தங்கப் பதக்கம் வென்றுள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. இந்தப் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய இந்திய மகளிர் அணி, இறுதிப் போட்டியில் இலங்கை அணியுடன் மோதியது.
டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. போட்டியின் தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா 79 ரன்களும், ஷபாலி வர்மா 48 ரன்களும் எடுத்தனர்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 17 பந்துகளில் 19 ரன்களுடன் அவுட் ஆனார்.
இறுதியாக விளையாடிய ரிச்சா கோஷ் 22 பந்துகளில் 49 ரன்களும், பார்த்தி புல்மாலி 7 ரன்களும் எடுத்தனர்.
அதிரடி ஆட்டத்தை அரங்கேற்றிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புடன் 216 ரன்களை எடுத்தது.
கடினமான இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, 15.4 ஓவர்களில் 69 ரன்களுடன் ஆல்-அவுட் ஆனது.
இதனால், இந்திய அணி 147 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது.