
மும்பையில் நரிமண் பாயிண்ட்டில் இருந்து ஒர்லிக்கு வடக்கு நோக்கி செல்லும் கடற்கரை சாலையில் இந்தியாவிலேயே முதல் முறையாக மெல்லிசை சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சாலையை மராட்டிய மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் திறந்து வைத்தனர்.
ஓர்லியில் இருந்து நிலத்தடி சுரங்கப்பாதை விட்டு வெளியேறிய பிறகு நரிமண் பாயிண் வரை சாலையில் 500 மீட்டர் நீளத்திற்கு இசை ஒலிக்கும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
வாகனங்கள் மணிக்கு 80 கி.மீ வேகத்தில் பயணிக்கும்போது ஜெய் ஹோ பாடலை வாகனத்தின் உள்ளே கேட்கலாம். சாலை மேற்பரப்பில் குறிப்பிட்ட தூரத்தில் ரம்பிள் பட்டைகள் (Rumble strips) வைக்கப்பட்டுள்ளது. இந்த பட்டைகளுடன் வாகங்களின் டையர்கள் உராசும்போது பாடல் ஒலி கேட்கும்.
இதேபோல இசையை ஒலிக்கும் சாலைகள் ஹங்கேரி, ஜப்பான், தென்கொரியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவே முதல் பரிசோதனை முயற்சி ஆகும்.