7% ஜி.டி.பி. வளர்ச்சியை இந்தியா அடையும்- மூடிஸ் கணிப்பு

India - 7% GDP Growth
7% ஜி.டி.பி. வளர்ச்சியை இந்தியா பதிவு செய்யும்
Published on

இந்தியாவில் நடப்பு 2026-27ஆம் நிதியாண்டில், ஜி.டி.பி. வளர்ச்சி விகிதம் 7% உயரும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி கணித்துள்ளது.

மேற்காசியப் போர்ப் பதற்றங்களுக்கு மத்தியிலும், ஏப்ரல் – ஜூன் காலாண்டில் பதிவான பொருளாதாரச் செயல்பாடு, தொடர்ச்சியான வெளிநாட்டு மூலதன வரவு போன்றவை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதாக ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்துள்ளது.

மேற்காசியப் போா், கச்சா எண்ணெய் விலை மாற்றங்களுக்கு இடையிலும், ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 7.8% வளா்ச்சியை இந்தியப் பொருளாதாரம் எட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ள முன்னணி மதிப்பீட்டு நிறுவனம் ஃபிட்ச் ரேட்டிங்ஸ், நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஜி.டி.பி. கணிப்பை 6.4%-இலிருந்து 6.9% ஆக அதிகரித்துள்ளது.

உயர் எரிசக்தி விலையிலிருந்து பொதுமக்களையும், நிறுவனங்களையும் பாதுகாக்கும் அரசின் கொள்கைகளால், இந்தியா வலுவான வளர்ச்சியை நோக்கி நகர்வதாகக் குறிப்பிட்டுள்ள பொருளாதார ஒத்துழைப்பு – மேம்பாட்டு அமைப்பு, இந்தியாவின் நடப்பு நிதியாண்டிற்கான ஜி.டி.பி. 7.1% இருக்கும் என்று கணித்துள்ளது.

மேலும், நடப்பு நிதியாண்டில் ஜி-20 நாடுகளிலேயே மிக அதிகமாக இந்தியா 7% ஜி.டி.பி. வளர்ச்சியைப் பதிவு செய்யும் என்று அமெரிக்காவின் மூடிஸ் ரேட்டிங்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com