'ஐ.என்.எஸ். மங்ரோல்'... 3ஆவது நீர்மூழ்கிப் போர்க்கப்பல் சேர்ப்பு!

INS Mangrol
ஐ.என்.எஸ். மங்ரோல்
Published on: 

இந்தியாவிலேயே கட்டப்பட்ட நீர்மூழ்கி எதிர்ப்புப் போர்க்கப்பல் கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் 'ஐ.என்.எஸ். மங்ரோல்' எனும் மூன்றாவது போர்க்கப்பல் கட்டப்பட்டது. குஜராத்தின் ஜூனாகத் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற மீன்பிடித் துறைமுகமான மங்ரோல் நினைவாக, இந்தப் புதிய போர்க்கப்பலுக்கு 'ஐ.என்.எஸ். மங்ரோல்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்தக் கப்பல் ஆழம் குறைந்த கடற்கரையோரங்களில் நுழையும், எதிரி நாட்டின் நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறிந்து, தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.

நேற்று மும்பையில் நடைபெற்ற விழாவில், இந்திய கடற்படையில் 'ஐ.என்.எஸ். மங்ரோல்' சேர்க்கப்பட்டது.

இந்தக் கப்பல் குறித்து, மேற்கு கடற்படை தளபதி சஞ்சய் வத்சயன் கூறியதாவது:

"இந்தியாவின் நீண்ட கடற்கரை, கடல்சார் வர்த்தகப் பாதைகளைப் பாதுகாக்க வலுவான கடற்படை அவசியமாகிறது. இதற்காக, இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 10 போர்க்கப்பல்கள் இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளன. நடப்பு ஆண்டு இறுதிக்குள், மேலும் 8 போர்க்கப்பல்களை இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்திய கடற்படையிடம் 131 போர்க்கப்பல்கள், 20 நீர்மூழ்கிகள் என மொத்தம் 151 தளவாடங்கள் உள்ளன. மேலும், 42 கப்பல்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த 'ஐ.என்.எஸ். மங்ரோல் இந்தியப் பெருங்கடல் எல்லையோரங்களைப் பாதுகாக்க உதவும்." என்று சஞ்சய் கூறினார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com