முதல்வர் பதவிலியிருந்து விலகுகிறார் நிதிஷ் குமார்?

பீகார் முதல்வர் நிதிஷ் குமார்
பீகார் முதல்வர் நிதிஷ் குமார்
Published on

பீகாரில் 10 முறை முதலமைச்சராக இருந்த நிதிஷ் குமார் மாநிலங்களைவை எம்.பி.யாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அவரின் ஆதரவாளர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வரும் மாநிலங்களவை தேர்தலில் பீகாரில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி 2 இடங்களில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. இதில் ஒன்றில் மத்திய அமைச்சர் ராம்நாத் தாக்கூர் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. மற்றொரு இடத்துக்கு இன்னும் வேட்பாளர் உறுதியாகவில்லை.

இந்நிலையில், நிதிஷ் குமார் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகி, மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவார் எனவும் அவரது மகன் நிஷாந்த் குமார் துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்பார் எனவும் பாஜகவை சேர்ந்த ஒருவர் அடுத்த முதலமைச்சரக பதவியேற்பார் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாநிலங்களவை தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். எனவே இத்தேர்தலில் நிதிஷ் குமார் போட்டியிடுகிறாரா என்பது இன்று தெரியவரும்.

logo
Andhimazhai
www.andhimazhai.com