ஐ.நா பொதுச் சபைக்கான இந்தியாவின் துணை நிரந்தரப் பிரதிநிதி யோஜனா படேல்
ஐ.நா பொதுச் சபைக்கான இந்தியாவின் துணை நிரந்தரப் பிரதிநிதி யோஜனா படேல்

இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம்: ஐ.நா. தீர்மானத்தை புறக்கணித்த இந்தியா!

இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் தொடர்பாக ஐ.நா கொண்டு வந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்துள்ளது.

இஸ்ரேல் - ஹமாஸ் போர் கடந்த 20 நாள்களாக நடைபெற்று வருகிறது. இந்தப் போரை மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஜோர்டான் அரசு ஐ.நா. பொதுச் சபையில் வரைவுத் தீர்மானம் கொண்டுவந்தது. தீர்மானத்துக்கு ரஷ்யா, பாகிஸ்தான், மாலத்தீவு, வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா உள்பட 120 நாடுகள் ஆதரவு அளித்தன.

அந்தத் தீர்மானத்தை இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, ஜப்பான், உக்ரைன், பிரிட்டன் உள்ளிட்ட 45 நாடுகள் வாக்களிக்காமல் புறக்கணித்தன. 14 நாடுகள் தீர்மானத்தை எதிர்த்தும் வாக்களித்துள்ளன.

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் தொடர்பான தீர்மானத்தில் ஹமாஸ் இயக்கத்தின் தாக்குதல் பற்றி எதுவும் குறிப்பிடாததால் வாக்கெடுப்பைப் புறக்கணித்ததாக இந்திய தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com