இஸ்ரோவில் நூற்றுக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் விலகல்!

rocket
ராக்கெட்
Published on

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்திலிருந்து 120-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் விருப்ப ஓய்வு அல்லது ராஜிநாமா செய்துள்ளனர்.

குறுகிய காலத்தில் பலர் தாமாகப் பதவி விலகியதால், விருப்ப ஓய்வு தொடர்பான விதிமுறைகளைக் கடுமையாக்கியுள்ளது இஸ்ரோ.

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம், இந்தியாவின் பல்வேறு முக்கிய திட்டங்கள் செயல்படுத்தவுள்ள நிலையில், முக்கிய விஞ்ஞானிகள் பலரும் வெளியேறி வருகின்றனர்.

செயற்கைக்கோள் திட்டங்களில், மத்திய அரசு தற்போது தனியார் நிறுவனங்களை ஈடுபடுத்தி வரும் நிலையில், அந்த தனியார் நிறுவனங்கள் தலைமைப் பொறுப்புக்கு அனுபவம் வாய்ந்த விஞ்ஞானிகளைத் தேடி வருகின்றன.

இஸ்ரோவிலிருந்து வெளியேறும் முக்கிய விஞ்ஞானிகள் தற்போது தனியாார் நிறுவனங்களில் இணைந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால், இனி முக்கியமான திட்டங்கள் தொடர்புடைய விஞ்ஞானிகள் அதாவது 'குரூப் ஏ' வகையைச் சேர்ந்தவர்களின் விலகல் குறித்த கோரிக்கைகள் விண்வெளித் துறைக்கு அனுப்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com