உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

சி.ஏ.ஏ.-வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஐ.யு.எம்.எல். மனு!

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிராக உச்சநீதிமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மனு தக்கல் செய்துள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்ட அமலாக்க விதிகள் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக வெளியிடப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் சில மாதங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். அந்தவகையில், குடியுரிமை திருத்தச் சட்டம் நேற்று நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இதற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், சிஏஏ-வை எதிர்த்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 200க்கும் மேற்பட்ட பொதுநல மனுக்கள் தொடரப்பட்டன. அவை விசாரணையில் உள்ளன. சமீபத்தில் நடந்த விசாரணையின் போது கூட, ஒன்றிய அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இவ்வாறான சூழலில் குடியுரிமை திருத்த சட்டத்தை ஒன்றிய அரசு அமலுக்கு கொண்டு வந்துள்ளது. எனவே ஒன்றிய அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். குடியுரிமையை மதத்துடன் இணைப்பதன் மூலம், அது மத பாகுபாட்டிற்கு வழிவகுக்கிறது. எனவே சிஏஏ அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ளது. இம்மனு மீதான விசாரணை இன்று மாலை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com