இந்தியா
குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் திடீரென பதவி விலகியுள்ளார்.
குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவுக்கு இதுகுறித்து எழுதியுள்ள கடிதத்தில், மருத்துவக் காரணங்களால் இப்பதவியிலிருந்து அரசமைப்புச்சட்டப் பிரிவு 67(அ)-ன்படி, தான் விலகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனக்குச் சிறப்பான முறையில் ஆதரவு வழங்கியமைக்காக குடியரசுத்தலைவருக்கு தன்கர் நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்.
பிரதமருக்கும் அவரின் அமைச்சரவை சகாக்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இதேபோல அவர் நன்றி கூறியுள்ளார்.
பாரதநாடு எனக் குறிப்பிட்டு நாட்டைப் பற்றியும் நாட்டின் முன்னேற்றமான காலகட்டத்தில் தான் பணியாற்ற வாய்த்ததாகவும் அவர் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.