ஜம்மு – காஷ்மீர் பேருந்து விபத்து
ஜம்மு – காஷ்மீர் பேருந்து விபத்து

ஜம்மு – காஷ்மீர்: பள்ளத்தில் விழுந்த பேருந்து; 37 பேர் உயிரிழந்த துயரம்!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் பேருந்து ஒன்று ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்ததில் 37 பயணிகள் உயிரிழந்த துயரம் நேர்ந்துள்ளது.

ஜம்மு - காஷ்மீர், தோடா மாவட்டத்தில் இன்று கிஷ்த்வாரிலிருந்து ஜம்மு நோக்கிச் சென்ற பேருந்து ஒன்று, இன்று காலையில் படோத் - கிஷ்த்வார் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது ட்ருங்கல்-அசார் அருகே சாலையிலிருந்து கவிழ்ந்து 200 மீட்டர் பள்ளத்தாக்கில் விழுந்தது.

விபத்துக்குள்ளான பேருந்தில் பயணித்த 55 பேரில் 37 போ் உயிரிழந்துவிட்டனர் என்று அந்த மாவட்ட சிறப்பு எஸ்.பி. தோடா அப்துல் க்யூம் தெரிவித்துள்ளார். விபத்தில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது விபத்து நிகழ்ந்த இடத்தில் மீட்புக் குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மீட்புப் பணியின்போது சில உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் ஜம்மு காஷ்மீர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com