டி.கே.சிவக்குமார்
டி.கே.சிவக்குமார்

கர்நாடகம்: காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க பா.ஜ.க. சதி! - டி.கே.சிவகுமார்!

கர்நாடகாவில் காங்கிரஸ் அரசைக் கவிழ்க்க நினைக்கும் பா.ஜ.க.வின் சதித்திட்டம் ஒருபோதும் வெற்றி பெறாது என்று அம்மாநிலத் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு கூட்டணி அரசைக் கவிழ்த்தது போல தற்போது காங்கிரஸ் அரசைக் கவிழ்க்க சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் பா.ஜ.க.வினர் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக அம்மாநில காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கனிகா ராவ் கூறியிருந்தார். இது அம்மாநில அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

இதுகுறித்து கர்நாடக மாநில துணை முதலைச்சர் டி.கே.சிவக்குமார் மிகப்பெரிய சதித்திட்டம் நடைபெறுவது குறித்து தங்களுக்குத் தெரியும் என்றும், எனினும் அது ஒருபோதும் வெற்றி பெறாது என்றும் கூறியுள்ளார்.

மேலும், பா.ஜ.க.வைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கோடிக்கணக்கில் பணம், அமைச்சர் பதவி என்றெல்லாம் கூறி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுக்க முயன்று வருவதாகவும், அது நிச்சயம் தோல்வியில் முடியும் என்றும் தெரிவித்தார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com