அமைச்சர் வன்னியரசு மீது விசாரணை- கர்நாடக அரசு உத்தரவு!

புலியைத் துரத்திய சிறுத்தை
புலியைத் துரத்திய சிறுத்தை
Published on: 

அமைச்சர் வன்னியரசு கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் சரணாலயப் பகுதியில் விதிகளை மீறியதாகப் பிரச்னை எழுந்துள்ளது. 

முன்னதாக, கடந்த 10ஆம் தேதி அவர் குடும்பத்தினருடன் நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதிக்குச் சென்றிருந்தார். அப்போது அவர் புலி ஒன்றைத் துரத்திச் செல்வதையும் அவருடன் வனத்துறை அதிகாரிகள் ஓடுவதையும் ரீல்களாக சமூக ஊடகத்தில் வெளியிட்டனர். 

அத்துடன், காட்டு யானை ஒன்றை அவர் நெருங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. 

பத்து நாள்களாக சமூக ஊடகங்களில் இதுபற்றி காரசாரமாகக் கருத்துகள் வெளியிடப்பட்டு வந்த நிலையில், இந்த விவகாரத்தில் கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் சரணாலயப் பகுதியும் இடம்பெற்றிருப்பது அந்த மாநிலத்தில் அரசுக்கு எதிராக விமர்சனங்களை ஏற்படுத்தியது. 

அதைத் தொடர்ந்து, வன்னியரசு விதிகளை மீறினாரா? அதிகாரிகள் அதற்கு உடந்தையாக இருந்தார்களா என்பதைப் பற்றி விசாரிக்குமாறு கர்நாடக வனத் துரை அமைச்சர் இராமலிங்கரெட்டி அம்மாநில வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.