தெலுங்கானாவில் முன்னாள் முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா ஐதராபாத்தில் இன்று புதிய கட்சியைத் தொடங்கினார்.
தெலுங்கானா இராஷ்டிரிய சேனா என அதற்குப் பெயரிட்டுள்ளார்.
இது அவர் தந்தை தொடங்கிய தெலுங்கானா இராஷ்டிரிய சமிதியின் பெயரை ஒட்டியதாக இருக்கிறது.
தேர்தல் ஆணையம் இதற்கு ஒத்துக்கொள்ளுமா என்பது பெரும் கேள்வியாக எழுந்துள்ளது.
ஏனெனில் தேர்தல் ஆணைய விதிப்படி முன்னைய கட்சி ஒன்றின் பெயரையோ அதன் சுருக்கத்தையோ போல புதிய கட்சியினது பெயர் இருந்தால் ஏற்றுக்கொள்ளப்படாது.
ஒருவேளை பழைய கட்சியின் பெயர் பயன்படுத்தப்படாமல் கிடப்பில் இருந்தால், குறைந்தது ஆறு ஆண்டுகளாவது அதன் பெயரைப் பயன்படுத்த முடியாது.
சந்திரசேகர் ராவ் கடந்த 2023ஆம் ஆண்டில் தன்னுடைய கட்சியை இந்திய அரசியலில் எடுத்துசெல்வதற்காக, அதன் பெயரையே பாரத இராஷ்டிர சமிதி என மாற்றிக்கொண்டார்.
ஆனாலும் தெலுங்கானாவில் ஆட்சியை இழந்த நிலையில், கவிதாவை தில்லி மதுபான ஊழல் வழக்கில் அமலாக்கத் துறை கைதுசெய்து சிறையில் அடைதத்து. அரவிந்த் கெஜ்ரிவால், கவிதா உட்பட பலர் அந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். அந்த வழக்கையொட்டி குடும்பத்திற்குள் உரசல் உண்டாகி, கவிதா கட்சியைவிட்டு விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.