கேரளத்தில் தேர்தல் ஜரூர்... தொகுதிகள், வேட்பாளர்கள் அறிவிப்பு!

கேரளம்
கேரளம்
Published on

சட்டப்பேரவைத் தேர்தலில் கேரளத்தில் ஆளும் இடதுசாரி முன்னணி சார்பில் முதலமைச்சர் உட்பட வேட்பாளர்களின் பெயர்களை அந்தக் கூட்டணி வெளியிட்டுள்ளது. 

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப் பில் கட்சியின் மாநிலச் செயலா ளர் எம்.வி. கோவிந்தன் முதற்கட்ட மாக இடதுஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சியின் 81 வேட்பாளர்களின் பெயர்களை வெளியிட்டார்.

முதலமைச்சர் பினராயி விஜயன் தர்மடம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். இவருடன் இந்திய கால்பந்து வரலாற்றில் முத்திரை பதித்த யு. ஷரப் அலி (சுயேச்சை) போன்ற விளையாட்டு வீரர்களும் களம் இறக்கப்பட்டிருக்கின்றனர்.

முதற்கட்டமாக 81 பேர் அறிவிக்கப் பட்டுள்ளனர். இதில் இடது ஜனநா யக முன்னணி (LDF) ஆதரவு பெற்ற 6 சுயேச்சைகளும் அடங்குவர்.

நிர்வாகத் திறமை, மக்கள் நம்பிக்கையின் அடையாளமாக 11 அமைச்சர்களும் 54 தற்போதைய எம்.எல்.ஏ-களும் மீண்டும் போட்டியிடுகின்றனர்.

எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியில் காங்கிரஸ் கட்சி 95 தொகுதிகளில் போட்டியிடுகிறது. முஸ்லிம் லீக் கட்சி 27 இடங்களில் போட்டியிடுகிறது. கேரள காங்கிரஸ் எட்டு தொகுதிகளிலும் போட்டியில் இறங்குகிறது. 

காங்கிரஸ் கட்சியின் தற்போதைய 22 எம்.எல்.ஏ.களில் 19 பேர் உட்பட 55 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

பா.ஜ.க. சார்பில் 47 பேரைக் கொண்ட முதல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

ஏப்ரல் 9ஆம் தேதி கேரள சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.  

logo
Andhimazhai
www.andhimazhai.com