இந்தியா
தமிழகத்தில் கோடை வெயில் மண்டையைப் பிளந்துவரும் நிலையில் பக்கத்து மாநிலமான கேரளத்திலும் இந்த பாதிப்பு அதிகரித்து வருகிறது.
அந்த மாநிலத்தின் பாலக்காடு, கொல்லம், திருச்சூர் முதலிய பல மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரியைத் தாண்டி பின்னி எடுக்கிறது.
இந்த நிலையில், அதிக வெயில் பாதிப்பு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் வெப்ப அலை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதைத் தொடர்ந்து, சுட்டெரிக்கும் வெயில் காரணமாக, பிற்பகல் நேரங்களில் பொதுமக்கள் கொரோனா காலத்தைப் போல ஊரடங்கை சுயமாகவே கடைபிடிக்க வேண்டும் என முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.