தாதா சாகேப் பால்கே விருதைப் பெறும் 2ஆவது கன்னட நடிகர் அனந்த் நாக்!

Anant nag
அனந்த் நாக்
Published on

மூத்த கன்னட நடிகரான அனந்த் நாக்கிற்கு இந்தியத் திரையுலகின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கே.ஜி.எஃப். திரைப்படத்தில் ஆனந்த் தீட்சித் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அனந்த் நாக் 2024ஆம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருதைப் பெறுகிறார்.

வரும் செப்டம்பர் 22ஆம் தேதி, குஜராத் மாநிலம் கெவாடியாவில் நடைபெறவுள்ள 72ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இந்த விருதை வழங்கவுள்ளார்.

இவர் திரைத்துறையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயணித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உட்பட்ட மொழிகளில் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

கடந்த 2025ஆம் ஆண்டு, நாட்டின் மூன்றாவது உயரிய குடிமை விருதான பத்ம பூஷன் விருதை மத்திய அரசு இவருக்கு வழங்கிச் சிறப்பித்தது.

கன்னடத் திரையுலகில் நடிகர் ராஜ்குமாருக்குப் பிறகு, தாதா சாகேப் பால்கே விருதைப் பெறும் இரண்டாவது கன்னட நடிகர் என்ற பெருமையை அனந்த் நாக் பெறுகிறார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com