மல்லிகார்ஜுன கார்கே
மல்லிகார்ஜுன கார்கே

இந்தியா கூட்டணி தலைவராக கார்கே; பொறுப்பை நிராகரித்த நிதிஷ்!

இந்தியா கூட்டணி தலைவராக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை நிதிஷ் குமார் நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய பா.ஜ.க. அரசை வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கினர். அந்த கூட்டணியின் அடுத்தடுத்த ஆலோசனைக் கூட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இருப்பினும் அந்த கூட்டணிக்கு யார் தலைவர் என்பதில் குழப்பம் நிலவியது.

இந்நிலையில், 'இந்தியா' கூட்டணி தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று காணொலி மூலம் நடந்த இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் நிராகரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com