தில்லியில் இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டம்
தில்லியில் இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டம்

295 இடங்களில் இந்தியா கூட்டணி வெற்றி: கார்கே நம்பிக்கை!

மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியானது 295 இடங்களில் வெற்றி பெறும் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் தில்லியில் இன்று நடைபெற்றது. காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா, இராகுல், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ், பீகார் ஆர்.ஜே.டி. தலைவர் தேஜஸ்வி, ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால், தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு எம்.பி. உட்பட பலரும் இதில் கலந்துகொண்டனர். 

கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கார்கே, மக்களவைத் தேர்தலைக் கையாண்டது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். 

தங்கள் கூட்டணி 295 இடங்களில் வெற்றிபெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com