பள்ளி மாணவர்கள்
பள்ளி மாணவர்கள்

நிபா அச்சம்: கோழிக்கோட்டில் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் மூடல்!

நிபா வைரஸ் பாதிப்பினால் கோழிக்கோடு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி வருகிற செப்டம்பர் 24 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் காரணமாக இருவர் உயிரிழந்த நிலையில், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், அவர்களுக்கு சிகிச்சையளித்த மருத்துவமனை ஊழியர்கள் என நூற்றுக்கணக்கானோர் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கேரள சுகாதாரத்துறை நிபா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன்படி, கடந்த இரு நாள்கள் கோழிக்கோடு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் வருகிற செப்டம்பர் 24 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் வகுப்புகளை நடத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com