எல்.முருகன்
எல்.முருகன்

மீண்டும் மாநிலங்களவை எம்.பி. ஆகும் எல்.முருகன்!

மைய இணையமைச்சர் எல்.முருகன் மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இந்த முறை மத்தியப்பிரதேச மாநிலத்திலிருந்து அவர் போட்டியிடுகிறார் என பா.ஜ.க. தலைமை இன்று காலையில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, வரும் மக்களவைத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் போட்டியிடுவார் என அக்கட்சி வட்டாரங்களே கூறிவந்தன. முருகனும் அந்தத் தொகுதியில் பம்பரமாகச் சுற்றிவந்தபடி இருந்தார். 

இந்த நிலையில், ஏற்கெனவே மத்தியப்பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வுசெய்யப்பட்ட முருகனின் பதவிக்காலம் வரும் ஏப்ரலுடன் முடிவடைகிறது. மீண்டும் அவர் அங்கிருந்தே மாநிலங்களவைக்குப் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்டு முருகன் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

logo
Andhimazhai
www.andhimazhai.com