மக்களவைத் தேர்தல்
மக்களவைத் தேர்தல்வடிவமைப்பு - எஸ்.கார்த்தி

மக்களவைத் தேர்தல்: ஓய்ந்தது இறுதிக் கட்டப் பிரச்சாரம்!

மக்களவைத் தேர்தலுக்கான இறுதிக் கட்ட தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்தது.

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 6 கட்டத் தேர்தல் நிறைவடைந்துள்ளது. கடைசிக் கட்டத் தேர்தலுக்கான பரப்புரை கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தது. அரசியல் கட்சிகள் தலைவர்கள், வேட்பாளர்கள், கட்சி நிர்வாகிகள் தெருத் தெருவாக சென்று வாக்கு சேகரித்து வந்த நிலையில், இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பரப்புரை நிறைவு பெற்றது.

உத்தரப் பிரதேசம் - 13, பீகார் - 8, பஞ்சாப் - 13, மேற்கு வங்கம் - 9, இமாச்சல் பிரதேசம் - 4 , ஒடிசா - 6, ஜார்கண்ட் - 3, சண்டிகர் -1 என 8 மாநிலங்களில் உள்ள 57 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏழாவது மற்றும் இறுதிக் கட்ட தேர்தல் நாளை மறுநாள் (ஜூன் 1) நடைபெற உள்ளது. குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடியின் வாரணாசி தொகுதிக்கும் நாளை மறுநாள் தேர்தல் நடக்கிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com