பாலியல் வழக்கில் சிக்கிய தேவகவுடா பேரனுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

பிரஜ்வால்
பிரஜ்வால்
Published on

கர்நாடக மாநிலம் ஹசன் தொகுதி எம்.பி.யும் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனுமான பிரஜ்வாலுக்கு எதிராக அனைத்து விமான நிலையங்களிலும் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் கர்நாடக காவல்துறை அமைத்துள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு பிரஜ்வாலுக்கும் அவரின் தந்தை ரேவண்ணாவுக்கும் விசாரணைக்கு வரும்படி நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதனிடையே வெளிநாட்டுக்குத் தப்பியோடிய பிரஜ்வால், தன்னுடைய வழக்குரைஞர் மூலம், தற்போது தான் வெளிநாட்டில் இருப்பதால், சிறப்புப் புலனாய்வுக் குழு முன்பாக ஆஜராக, ஒரு வார காலம் அவகாசம் வேண்டும் எனக் கேட்டுள்ளார்.

மாநிலத்தையே உலுக்கியுள்ள இந்தப் பாலியல் விவகாரத்தில், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, பிரதமர் மோடிக்கு பகிரங்க வேண்டுகோள் விடுத்து, பிரஜ்வாலுக்கு வழங்கப்பட்ட இராஜிய விசாவை ரத்துசெய்து விரைவில் விசாரணையில் ஆஜராக வைக்கும்படி கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில், இந்தியாவின் எந்த விமான நிலையத்தில் இறங்கினாலும் பிரஜ்வாலைக் கைதுசெய்வதற்கான வகையில், பிரஜ்வாலுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com