ஸ்விக்கியின் இன்ஸ்டா மார்ட் நிறுவனம், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து, இந்தியாவின் முதல் ஆன்-டிமாண்ட் எல்.பி.ஜி. சிலிண்டர் டெலிவரி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
முதல் கட்டமாக இந்தச் சேவை பெங்களூருவில் தொடங்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் இன்ஸ்டா மார்ட் செயலி மூலம் ஹெ.பி. நவ்யா 10 கிலோ எல்.பி.ஜி. காம்போசிட் சிலிண்டர், 5 கிலோ உலோக எல்.பி.ஜி. சிலிண்டரை ஆர்டர் செய்து வீட்டிலேயே பெற்றுக்கொள்ளலாம்.
முதல் முறையாக வாங்குபவர்களுக்கு அடையாளச் சரிபார்ப்பு கட்டாயம் இருக்கும் என்றும், அதன் பிறகு காலியான சிலிண்டரை ஒப்படைத்து மீண்டும் நிரப்பிக்கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
புதிய ஹெ.பி. நவ்யா சிலிண்டர் எடை குறைவாகவும், துருப்பிடிக்காத காம்போசிட் பொருளால் தயாரிக்கப்பட்டதும் ஆகும்.
மேலும், சிலிண்டருக்குள் எவ்வளவு எரிவாயு மீதமுள்ளது என்பதை வெளிப்புறத்திலிருந்தே பார்க்கும் வகையில் வெளிப்படையான வடிவமைப்பும் இதில் இடம்பெற்றுள்ளது.