இரத்தப் பரிசோதனை மூலம் நுரையீரல் புற்றுநோயை முன்னரே கண்டறியும் வசதியை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
இந்தியாவில் மிகக் கொடுமையான, அதிகம் பரவக்கூடிய நோய்களில் ஒன்று நுரையீரல் புற்றுநோய். 2015-ல் இதன் பாதிப்பு சுமார் 63,700-ஆக இருந்த நிலையில், 2025-க்குள் 81,000ஆக அதிகரித்துள்ளது. பெரும்பாலும் நோய் முற்றிய நிலையில்தான் இது கண்டறியப்படுகிறது.
இந்த ஆய்வு குறித்த செய்தி, 'செல்' இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இரத்தத்தில் உள்ள 14 புரதங்களைக் கொண்டு நுரையீரல் புற்றுநோய் வருவதற்கு 5.6 ஆண்டுகளுக்கு முன்னரே அதன் அபாயத்தைத் துல்லியமாகக் கணிக்கமுடியும். இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நோயாளிகள் எடுத்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் பிரிட்டனில் உள்ள யுகே பயோபேங்கில் உள்ள 48,000 பேரின் இரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இருப்பினும், இந்தியாவில் பயன்படுத்துவதற்கு முன்னர் இந்தியர்களின் இரத்த மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றார் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோய் நிபுணரான டாக்டர் அபிஷேக் சங்கர்.
புகை பிடிப்பவர்களிடம் மட்டுமல்லாமல், காற்று மாசுபாட்டினால் அவதிப்படுபவர்களிடமும் இந்த அறிகுறிகள் அதிகரித்துக் காணப்படுகிறது.
இந்தியா போன்ற நாடுகளில் காற்று மாசுபாடு அதிகரித்து காணப்படும் இடங்களுக்கு வரும்முன் காக்க உதவும் இதுபோன்ற பரிசோதனைகள் கட்டாயம் பயன்படும்.