வெற்றிக் கொண்டாட்டத்தில் பா.ஜ.க.
வெற்றிக் கொண்டாட்டத்தில் பா.ஜ.க.

ராஜஸ்தான், ம.பி. - ஆட்சிக்கான தொகுதிகளை வென்றது பா.ஜ.க.!

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களையும் தாண்டி பா.ஜ.க. முன்னிலை வகித்து வருவதால், இரு மாநிலங்களிலும் பா.ஜ.க. ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.

சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலங்கானா 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.

இதில், மத்தியப்பிரதேச மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க.வும் காங்கிரசும் சரிக்குச்சரி போட்டியாக வந்தபோதும், ஒரு கட்டத்தில் பா.ஜ.க. முன்னிலை பெறத் தொடங்கியது.

இரவு 9 மணி நிலவரப்படி, ராஜஸ்தானில் 199 தொகுதிகளில் பா.ஜ.க. 115 இடங்களிலும், காங்கிரஸ் 69 இடங்களிலும் பிற கட்சிகள் 14 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளன.

இதேபோல், மத்தியப்பிரதேசத்தில் 230 தொகுதிகளில் பா.ஜ.க. 151 இடங்களில் வெற்றியும், 12 இடங்களில் முன்னிலையும் பெற்றுள்ளது. காங்கிரஸ் 58 தொகுதிகளில் வென்று, 8 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com