கார்கேவுக்கு தண்ணீர் பாட்டிலைத் திறந்துதந்த ராகுல்
கார்கேவுக்கு தண்ணீர் பாட்டிலைத் திறந்துதந்த ராகுல்

தண்ணீர் பாட்டிலைத் திறக்க சிரமப்பட்ட கார்கே...உதவி செய்த ராகுல்!

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு, ராகுல் காந்தி எம்.பி. தண்ணீர் ஊற்றிக் கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

கர்நாடக மாநில அரசின் சார்பில், பெண்களுக்கு மாதம் ரூ.2,000 உதவித் தொகை வழங்கும் கிருக லட்சுமி திட்டத்தின் தொடக்க விழா மைசூரில் இன்று நடைபெற்றது.

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார், காங்கிரஸ் அகில இந்தியத் தலைவர் மல்லிகர்ஜூன கார்கே, ராகுல் காந்தி எம்.பி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தத் திட்டத்துக்காக ரூ. 15,700 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இதனால்1.1 கோடி குடும்பத்தலைவிகள் பயன்பெறுவார்கள் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

கிருகலட்சுமி திட்டத்தின் தொடக்க விழாவில் பேசிய ராகுல் காந்தி, “இந்த அரசின் கொள்கையானது பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்திற்காகப் பயன்படும் என காங்கிரஸ் கட்சி நம்புகிறது.” என்றார்.

மேடையில் அமர்ந்துகொண்டிருந்த கார்கே, தண்ணீர் குடிப்பதற்காக பாட்டிலைத் திறக்க முற்பட, அவரால் அதைத் திறக்க முடியவில்லை. இதைப் பார்த்த உடனே ராகுல் காந்தி, அவரிடமிருந்து தண்ணீர் பாட்டிலை வாங்கி, டம்ளரில் தண்ணீரை ஊற்றிக் கொடுத்தார். இந்த நிகழ்வின் வீடியோ காட்சியானது இணையத்தில் தீயாய்ப் பரவிவருகிறது.

இதையொட்டி, “ராகுல் காந்திக்கு எவ்வளவு நல்ல பண்பு!”என சமூக ஊடகவாசிகள் பாராட்டித் தள்ளுகின்றனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com